16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று ஆட்டம் வருகிற 21-ந் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டம் நடைபெறுகிறது.
இதில் முதலாவது தகுதி சுற்று ஆட்டம் (லீக் சுற்று முடிவில் புள்ளிபட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள்) வருகிற 23-ந் தேதியும், வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் (புள்ளிபட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள்) 24-ந் தேதியும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
சென்னையில் நடைபெறும் இந்த இரண்டு பிளே-ஆப் சுற்று ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்டேடியத்தில் உள்ள கவுண்ட்டர்களில் விற்பனை செய்வதால் ஏற்படும் கூட்ட நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளை தவிர்க்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்று போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு தொடங்க உள்ளது. இரண்டாவது தகுதி சுற்று ஆட்டம் 26-ந் தேதியும், இறுதிப்போட்டி 28-ந் தேதியும் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.