‘அபுதாபியிலும் கொரோனா’ – போட்டி எண்ணிக்கை குறைக்கப்படுமா.?

27 August 2020, 2:23 pm
Quick Share

அபுதாபியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 13-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் செப்-19ஆம் தேதி தொடங்கி நவ-10,ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் பங்கேற்க தோனி தலைமையிலான குழு உள்ளிட்ட பிற அணி வீரர்கள் என அனைவரும் அபுதாபி சென்றுள்ளனர். வீரர்கள் அனைவரும் 5 நாள் தனிமை படுத்துதலில் உள்ள நிலையில், பிறகு போட்டிக்கு தயாராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், ஐபிஎல் தொடர் நடத்துவதற்கான வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அமீரகத் தலைநகர் அபுதாபியில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியுமா என்ற கேள்வி கிரிக்கெட் வாரியத்திற்கு எழுந்துள்ளது.

இதனால், ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை அறிவிப்பதில் இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அமீரகத்திற்கு வரும் அனைத்து நுழைவு வாயில்களிலும் கொரோனா தொற்று பரிசோதனையை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் போட்டிகளின் எண்ணிக்கையை குறைக்கலாமா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

Views: - 26

0

0