‘இ ஷாலே கப் நம்தே’… கோலியின் பாச்சா பலிக்குமா..? இன்று ஐதராபாத்துடன் மோதல்..!

21 September 2020, 1:29 pm
kohli - updatenews360
Quick Share

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரூ – ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் ஐ.பி.எல். கிரிக்கெட் எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோ, அதோபோல, பெங்களூரூ அணியின் மீதும் அதிகளவிலான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்திய அணியின் ரன் மெஷின் எனப்படும் கோலி தலைமையிலான பெங்களூரூ அணியில், டிவில்லியர்ஸ், பின்ச், மோரிஸ், சஹால் உள்ளிட்ட சிறந்த வீரர்களை கொண்ட பெங்களூரூ அணி இதுவரை கோப்பையை ஒருமுறை கூட வெல்லாதது அந்த அணிக்கு விடப்பட்ட சாபமாகவே இருந்து வருகிறது.

கடந்த சீசனில் கடைசி இடத்தையே பிடித்த பெங்களூரூ அணி, இந்த முறை அதற்கு நேர்மாறாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படும் என அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். புதிதாக அணிக்கு எடுக்கப்பட்டுள்ள ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரராக இறங்க இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.

அதேவேளையில், ஐ.பி.எல்.லில் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வரும் ஐதராபாத் அணியும் பலம் வாய்ந்தது. வார்னர் தலைமையிலான அணியில் பேர்ஸ்டோவ், வில்லியம்சன், மனிஷ் பாண்டே, நபி, ரஷித்கான், விஜய் சங்கர் உள்ளிட்ட வீரர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். எனவே, பெங்களூரூ அணியால், ஐதராபாத்தை எளிதில் வீழ்த்தி விட முடியாது. இருப்பினும், இரு அணிகளில் யார் வெற்றியுடன் இந்தத் தொடரை தொடங்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.