பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப்போவது யார்…? டெல்லி – பெங்களூரூ அணிகள் பலப்பரீட்சை..!!

2 November 2020, 10:57 am
RCB-vs-DC- updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் டெல்லி – பெங்களூரூ அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில், வெற்றி பெறும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.

இந்த சீசனின் ஆரம்பத்தில் வெற்றி நடைபோட்ட டெல்லி அணி, புள்ளி பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்திலேயே மாறி மாறி நீடித்து வந்தது. ஆனால், அந்த அணி கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் தொடர் தோல்வியை சந்தித்து இருப்பது, தற்போது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த 4 போட்டிகளிலும் தோல்விக்கு முக்கியக் காரணமாக இருப்பது, அந்த அணியின் பேட்டிங்கே காரணமாக உள்ளது. மும்பைக்கு எதிரான போட்டியில் 110 ரன்களில் ஆட்டமிழந்தது டெல்லி அணியின் ரன் ரேட் பலத்த அடி வாங்கியது.

Pant- updatenews360

எனவே, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் பேட்டிங்கில் எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்துடன் இன்று பெங்களூரூவை சந்திக்கிறது.

பெங்களூரூ அணியை பொறுத்தவரையில் டெல்லியின் நிலைமைதான் அந்த அணிக்கும். கடைசியாக விளையாடிய 3 போட்டிகளும் தோல்வியை சந்தித்து பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் வெறும் 120 ரன்கள் மட்டுமே அடித்து படுதோல்வியை சந்தித்தது. அந்த அணியின் படிக்கல், பின்ச், விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோர் நினைத்தால் மட்டுமே அந்த அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல முடியும்.

பனிப்பொழிவால் 2வது பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு பிறகாசமாக இருப்பதால், இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணியே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. இதில் வெற்றி பெறும் அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறுவதுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை உறுதி செய்யும். தோல்வி அடையும் அணிக்கு, நாளை நடக்கும் ஐதராபாத் அணிக்குரிய இறுதி லீக் ஆட்டத்தின் முடிவை பொறுத்து பிளே-ஆப் சுற்று வாய்ப்பு கிடைக்குமா? இல்லையா? என்பது தெரிய வரும்.

Views: - 19

0

0