ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்ரிக்காவுக்கு எதிராக முதல் வெற்றி… சாதித்த அயர்லாந்து..!!

14 July 2021, 1:17 pm
ireland cricket - updatenews360
Quick Share

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்ரிக்கா அணியை முதல்முறையாக தோற்கடித்து அயர்லாந்து அணி அசத்தியுள்ளது.

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென்னாப்ரிக்கா அணி, தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. தற்போது ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி, கேப்டன் பால்பிர்னி (102), டெக்டார் (79) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து, விளையாடிய தென்னாப்ரிக்கா அணியால் 48.3 ஓவர்களின் முடிவில் 247 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக மாலன் 84 ரன்களும், டுசன் 49 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம், 43 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்ரிக்கா அணியை முதல்முறையாக அயர்லாந்து வீழ்த்தி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி 16-ம் தேதி நடக்கிறது.

Views: - 309

0

0