ப்ளே ஆஃப் சுற்றில் நுழையும் கடைசி அணி எது? மும்பையா? பெங்களூரா? இன்று 2 லீக் போட்டிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2023, 10:22 am
Rcb MI - UPdatenews360
Quick Share

ஐபிஎல் 2023 தொடரில் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைய உள்ளன. முதல் இரண்டு இடத்தில் குஜராத் மற்றும் சென்னை அணி உள்ளது. மூன்றாவது இடத்திற்கு லக்னோ அணி தகுதி பெற்றது.

4வது அணியா உள்ளே நுழையப் போகும் அணி எது என்பது குறித்து இன்று இரவு முடிவு தெரிந்துவிடும். ஐபிஎல்லில் பிளே ஆப் சுற்றுக்குள் நுழையப் போகும் கடைசி அணி எது என தீர்மானிக்கும் இரண்டு இறுதி லீக் போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.

முதலாவது போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொள்ளவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் மும்பை அணி கட்டாயம் வெற்றிபெறவேண்டும் என்ற நிலையில் களம் காண்கிறது.

அது மட்டுமல்லாமல் அதிக நெட் ரன்ரேட்டில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றை அவ்வணி பிரகாசப்படுத்த முடியும். ஐதராபாத்தை பொறுத்தவரை கடைசி இடமான 10 ஆவது இடத்தில் உள்ள அவ்வணி இதில் வெற்றி பெற்றால் 9ஆவது இடத்தை பெற்று ஆறுதல் தேடிக்கொள்ள முடியும்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் மற்றொரு போட்டியில் ஆர்சிபி மற்றும் முதலிடத்தில் உள்ள குஜராத் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இன்றைய முதல் போட்டியில் மும்பை அணி பிரமாண்ட வெற்றியைப் பெறும் பட்சத்தில் இப்போட்டியில் ஆர்சிபி அணி அதைவிட பிரமாண்ட வெற்றியை பெறவேண்டும்.

மாறாக மும்பை அணி தோற்கும் பட்சத்தில் ஆர்சிபி அணி போட்டியை வெறுமனே வென்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு சென்றுவிட முடியும். இரு அணிகளுக்கும் இப்போட்டிகள் முக்கியமானதாக உள்ளதால் இன்றைய போட்டிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Views: - 363

0

0