இந்த வயசுக்கு இது ஆகாது… தோனி பேட்டிங் செய்யும் போது இஷான் செய்த செயல் : விளாசும் சிஎஸ்கே ரசிகர்கள்..!!

Author: Babu Lakshmanan
20 September 2021, 11:25 am
Dhoni - ishan - updatenews360
Quick Share

கொரோனா தொற்று அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 2வது பகுதி ஆட்டங்கள் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் ஐபிஎல்லில் முக்கிய அணிகளான சென்னை – மும்பை அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை அணி, 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இந்த சூழலில் 4 வது விக்கெட்டுக்கு கேப்டன் தோனி களமிறங்கினார். இக்கட்டான சூழலை சமாளித்து ஆடக்கூடியவரான தோனியின் மீது ரசிர்களின் எதிர்பார்ப்பு பெரும் ஏற்பட்டது. ஆனால், அவர் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

இந்தப் போட்டியில் தோனி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது, மும்பை அணியின் இளம் வீரரான இஷான் கிஷான் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது, பந்து வீச வரும் போது, தோனியை பார்த்து அவுட் என்பது போல அவர் செய்கை செய்துள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இஷான் கிஷானின் செயலை விமர்சித்து வரும் சென்னை ரசிகர்கள், உன் வயதுதான்பா அவரது அனுபவம் என்றும், இந்த வயசுலயே இப்படி ஆடக் கூடாது எனவும் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர்.

Views: - 577

0

0