கம்பீருக்கு கொலை மிரட்டல் : இந்தியாவில் உருவெடுக்கிறதா ‘ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’..? விசாரணையை கையில் எடுத்த பாதுகாப்புத்துறை

Author: Babu Lakshmanan
24 November 2021, 2:15 pm
Quick Share

பாஜக எம்பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீருக்கு பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர், நாடாளுமன்ற தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அரசியல் மற்றும் விளையாட்டுக்கள் தொடர்பாக தடாலடியாக கருத்துக்களையும், பதில்களையும் வெளியிடுவார்.

இந்த நிலையில், இந்நிலையில், கவுதம் கம்பீர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ‘ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ என்ற பயங்கரவாத அமைப்பிடம் இருந்து இமெயில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்த கொலை மிரட்டல் தொடர்பாக கவுதம் கம்பீர் சார்பில் டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கம்பீர் இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கொலை மிரட்டல் விடுத்தது யார்..? ஏன்..? எதற்காக..? என விசாரித்து வரும் போலீசார், ’ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ என்ற பெயரில் காஷ்மீரில் ஏதேனும் பயங்கரவாத அமைப்பு உருவெடுத்து வருகிறதா? என்பது குறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 222

0

0

Leave a Reply