அவங்க யாருன்னு தெரியல… ஐசிசியிடம் சொன்ன கிரிக்கெட் ஆஸ்திரேலியா!

26 January 2021, 9:57 pm
Quick Share

சிட்னி: இந்திய கிரிக்கெட் வீரர்களை இனவெறியைத் தூண்டும் விதமாக பேசியவர்கள் யார் என தெரியவில்லை என்று ஐசிசியிடம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. இதில் சிட்னியில் நடந்த் மூன்றாவது டெஸ்ட் போட்ட் டிரா ஆனது. இதற்கிடையில் இந்த போட்டியின் போது இந்திய வீரர்களாக ஜஸ்பிரீத் பும்ரா, மற்றும் முகமது சிராஜை ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் இனவெறியைத் தூண்டும் விதமாக கடுமையாக விமர்சித்தனர்.

இதற்காக சிராஜ் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் நடுவரிடம் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து கேலரியில் இருந்த ஆறு பேரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்காக கிரிக்கெட் ஆஸ்திரேலிய பிசிசிஐயிடம் மன்னிப்பு கோரியிருந்தது. மேலும் அவர்களை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தது.

இந்நிலையில் தற்போது ஐசிசியிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி கிரிக்கெட் ஆஸ்திரேலியா அளித்த அறிக்கையில்,அவர்களை யார் என அடையாளம் காண முடியவில்லை என்றும், கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கிரிக்கெட் தொடரில் இனவெறி தாக்குதல் ஒன்றும் புதிதல்ல. கடந்த 2007 இல் இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேலியாவின் ஆண்டிரு சைமண்ட்ஸை இனவெறியைத் தூண்டும் விதத்தில் பேசினர். அதே போல சிட்னி மைதானத்தில் நடந்த போட்டியில் அரங்கேறிய மங்கிகேட் சர்ச்சை மிகப்பெரிய அளவில் வெடித்தது. தற்போது சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் ஆஸ்திரேலியா தொடரில் இனவெறி தாக்குதல் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

Views: - 4

0

0