மரண ஃபார்மில் ஜோ ரூட் : டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்து அசத்தல்…!!!

6 February 2021, 11:36 am
joe root - updatenews360
Quick Share

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 150 ரன்களை விளாசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இறுதியில் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் சேர்த்துள்ளது. ஜோ ரூட் 128 ரன்களுடன் 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினார். தொடர்ந்து, அபாரமாக ஆடிய அவர் 150 ரன்களை அடித்து அமர்க்களப்படுத்தினார்.

ஏற்கனவே, இந்தப் போட்டியில் சதம் அடித்தன் மூலம் 100வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தார் ஜோ ரூட்.

root - updatenews360 (3)

தற்போது, 150 ரன்களை கடந்து விளையாடி வரும் அவர், தொடர்ச்சியாக 150 ரன்களுக்கும் அதிமாக அடித்த வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அதாவது, ஜோ ரூட் விளையாடிய கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் முறையே 226, 228,186 மற்றும் தற்போது 155 ரன்களை கடந்து விளையாடி வருகிறார்.

அதிகமுறை 150க்கும் அதிகமான ரன்களை அடித்த வீரர்களின் விபரம் :-

குமார் சங்கக்காரா ( 4 போட்டிகள்)
வாலி ஹம்மாண்டு ( 3 போட்டிகள்)
டான் பிராட்மேன் ( 3 போட்டிகள்)
ஜாகீர் அப்பாஸ் (3 போட்டிகள்)
முடாஷார் நாஷர் (3 போட்டிகள்)
டாம் லாத்தம் (3 போட்டிகள்)
ஜோ ரூட் ( 3 போட்டிகள்)

Views: - 0

0

0