வார்னரை மட்டுமல்ல வில்லியம்சனையும் விட்டு வைக்காத விதி… தோல்விக்கு என்ன காரணம்?

2 May 2021, 10:35 pm
Quick Share

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தோல்வியடைந்த காரணத்தை கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இதுவரை கேப்டனாக இருந்த டேவிட் வார்னர், சுசீத் மற்றும் சித்தார்த் காவுல் ஆகியோர் நீக்கப்பட்டு முகமது நபி, புவனேஸ்வர் குமார், மற்றும் அப்துல் சமாத் அணியில் சேர்க்கப்பட்டனர். இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உனத்கத்திற்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தியாகி அணியில் சேர்க்கப்பட்டார். இதேபோல் சிவம் துபேவிற்கு பதிலாக அனுஜ் ரவாத் வாய்ப்பு பெற்றார்.

பட்லர் பிரமாதம்
தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க வீரர் ஜாஸ் பட்லர் (124)
சாம்சன் (48) ஆகியோர் கைகொடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் முன்னணி நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ஏமாற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.

மாற்றத்தை ஏற்படுத்திய முடிவு
இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் ஆறு புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்திற்கு தாவியது. சன்ரைசர்ஸ் அணி 7 போட்டியில் 6 ல் தோல்வியை சந்தித்து கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முக்கியமான பவுலரான ரசித் கானை பவர் ப்ளே எனப்படும் முதல் ஆறு ஒவர்களுக்குள் கேப்டன் வில்லியம்சன் களமிறக்கினார். இது கடைசி நேரத்தில் அந்த அணிக்கே எதிரான முடிவாக அமைந்தது.

இதுகுறித்து வில்லியம்சன் போட்டிக்கு பின் கூறுகையில், “ராஜஸ்தான் அணிக்கு ஜாஸ் பட்லர், மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் முக்கியமான வீரர்கள். அதனால் இவர்கள் களத்தில் இருக்கும் போது அவர்களுக்கு எதிராக ரசித் கானை அதிக பந்துகளை வீச திட்டமிட்டோம். அதனால் தான் முதல் 11 ஓவர்களுக்குள் அவரின் முழு கோட்டாவான 4 ஓவர்களும் முடிந்துவிட்டது. இதை ஏற்றுக்கொண்டு கடந்து செல்ல வேண்டும்” என்றார்.

Views: - 123

0

0

Leave a Reply