ஒரு படி மேலே சென்ற சச்சின்.! யுவராஜ் சிங் சவாலை வித்தியாசமாக செய்து அசத்திய ஜாம்பவான்.!!

17 May 2020, 9:48 am
Sachi n Yuvi - Updatenews360
Quick Share

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பிரபலங்கள் வீட்டில் தங்களுடைய நேரங்களை சேலஞ்ச் போன்ற சவால்களை விடுத்து நேரத்தை கழித்து வருகின்றனர்.

அப்டித்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்குப் பிடித்த விஷயங்கள் அல்லது சேலஞ்ச் என்று ஏதாவது ஒன்றி கவனம் செலுத்தி தற்போது அதை வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், “keep it up” சேலஞ்ச் செய்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த சேலஞ்ச் செய்ய சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரையும் பங்கேற்குமாறு பரிந்துரைத்துள்ளார். அது என்ன சவால் என்றால். மட்டையை (bat)ஒரு புறம் திருப்பிக் கொண்டு பந்தை மேல் நோக்கி அடிக்க வேண்டும்.

யுவராஜ் சிங் வெளியிட்ட வீடியோவில், பேட் கொண்டு பந்தை மேல் நோக்கி அடிக்கிறார். இந்த சவாலை சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரை பின்பற்றும் படி கேட்டுக்கொண்டார்.

ஆனால் இந்த சவாலை ஏற்றுக் கொண்ட சச்சின் கண்ணை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு, யுவராஜின் சவாலை ஒரு படி மேலே சென்று தனது வித்தியாசமான பாணியில் செய்து காட்டினார். இப்ப தெரியுதா கிரிக்கெட் ஜாம்பவான்னு இவர ஏன் நாம் சொல்றோம்னு.