விளையாட்டுத்துறைக்கான உயரிய விருது : ரோகித் சர்மா, மாரியப்பன் பெயர்கள் பரிந்துரை
18 August 2020, 3:04 pmQuick Share
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பாரா ஒலிம்பிக்கில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் பங்கேற்று தங்கம் வென்று சாதனை படைத்தார். இந்நிலையில் இவருக்கு விளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபில் டென்னிஸ் வீராங்கனை மாணிகா பத்ரா பெயரும் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதே போல கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் பெயருந்து இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Views: - 1
0
0