பெங்களூரூவை வைத்தே மீண்டும் ஃபார்முக்கு வந்த பஞ்சாப் ; முதல் போட்டியிலேயே மாஸ் காட்டிய கெயில் !! கடைசி பந்தில் த்ரில் வெற்றி

By: Udayaraman
15 October 2020, 11:18 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரூவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சார்ஜாவில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரூ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு, கோலி (48), மோரிஸ் (25), துபே (23) ரன்களை குவிக்க, சக வீரர்கள் சொதப்ப, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது. கடந்த போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிவில்லியர்ஸை, இந்தப் போட்டியில் 6 வது வீரராக களமிறக்கியது கேப்டன் கோலியை கடும் விமர்சனத்திற்குள்ளாக்கியது.

172 ரன்கள் எடுத்தால் பெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மாயங்க் அகர்வால் 45 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் கேஎல் ராகுல், அடுத்துவந்த கெயிலுடனும் அபாரமாக ஆடினார். இருவரும் பொறுமையாக ஆடி, தேவைப்படும் போது பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டனர். இதனால், இருவரும் அரைசதம் விளாசினர்.

இறுதி ஓவரில் ஓவரில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது, ஒரு ரன் மட்டுமே சேர்த்த நிலையில் கெயில் ரன் அவுட்டானார். இதனால், கடைசி பந்தில் ஒரு ரன் அடிக்க வேண்டி இருந்தது. அப்போது, பூரன் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். கேஎல் ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 61 ரன்களும், கெயில் 53 ரன்களும் சேர்த்தனர்.

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பஞ்சாப் அணி, மீண்டும் பெங்களூரூவை தோற்கடித்து, வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.

Views: - 46

0

0