இங்கிலாந்து அணியை இந்திய அணி லேசாக எடுத்துக்கொள்ள கூடாது :கிரண் மோரே!

1 February 2021, 5:00 pm
Pant test - updatenews360
Quick Share

இங்கிலாந்து கிரிக்கெட் அணி எந்த ஒரு தொடருக்கு முன்பாகவும் சிறப்பான பயிற்சி மேற்கொண்டு களத்தில் இறங்கும் என்பதால் இந்திய அணியின் அந்த அணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என முன்னாள் இந்திய வீரர் கிரண் மோரே தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 5ஆம் தேதி சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் துவங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய உற்சாகத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என கிரண் மோரே இந்திய கிரிக்கெட் அணியை எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து மோரே கூறுகையில், “இந்திய கிரிக்கெட் அணி இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்படும் என எனக்கு உறுதியாக தெரியும். ஆனால் இங்கிலாந்து அணி மிகச்சிறந்த பயிற்சியை மேற்கொண்டு களமிறங்க உள்ளது. அவர்கள் இந்திய அணிக்கு ஆச்சரியத்தை அளிக்க தயாராக இருப்பார்கள். மேலும் அவர்கள் அணியில் இரண்டு தரமான சுழற்பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வெற்றி பின்பாக இங்கிலாந்து அணியை இந்திய அணி லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணி போல கருத வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் பொருத்தவரை எந்த ஒரு அணியையும் சாதாரணமாக கருதக்கூடாது. ஒவ்வொரு செஷனும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வித்தியாசமான செஷன்களாகவே அமையும்.

இந்த தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அந்த அணியின் முக்கிய வீரர்களாக திகழ்கின்றனர். குறிப்பாக ரூட் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் தனது சிறந்த பார்மை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. மேலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வலு சேர்க்கின்றனர். அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் கூட இலங்கை மண்ணில் சிறப்பாகவே செயல்பட்டனர். அதனால் இந்திய அணி சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் இந்த தொடரை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்” என்றார்.

Views: - 0

0

0