மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கே எல் ராகுல்: பஞ்சாப் அணிக்கு இவர் தான் கேப்டனா?

2 May 2021, 6:26 pm
Quick Share

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு இவருக்கு ஆப்ரேஷன் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல். இவருக்கு திடீரென நேற்று இரவு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக மருந்து எடுத்துக் கொண்ட போதும் இவருக்கு அந்த வயிற்று வலி தீரவில்லை. இதனால் தொடர்ந்து வலியால் ராகுல் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆப்ரேஷன்
அங்கு இவரை ஆய்வு செய்த மருத்துவர்கள் இவருக்கு அப்பன்டிஸ் இருப்பதாகவும் அதற்காக அறுவை சிகிச்சை மூலம் உடனடி தீர்வு காணவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இவர் இதனால் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இவர் களமிறங்கமாட்டார் என்று அந்த அணியின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது கே எல் ராகுல் இதுவரை பங்கேற்றுள்ள 7 போட்டிகளில் 331 ரன்களுடன் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

சிறந்த ஆட்டம்
பஞ்சாப் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் பங்கேற்று, அதில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் 57 பந்தில் 91 ரன்கள் விளாசி பஞ்சாப் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார் ராகுல். இந்நிலையில் ராகுலுக்கு அறுவை சிகிச்சை முடிந்த உடன் மீண்டும் களமிறங்கும் சாத்தியங்கள் குறைவு என்பதால் இவர் இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போட்டிகளில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

யார் கேப்டன்
கே எல் ராகுல் பஞ்சாப் அணியில் இல்லாத நிலையில் அந்த அணியை யார் வழிநடத்துவார் என்று கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. ஆனால் கடந்த போட்டியில் ராகுல் சிலநேரம் மைதானத்தை விட்டு வெளியேறிய பொழுது கிறிஸ் கெயில் அணியை வழிநடத்தியதை காணமுடிந்தது. அதனால் டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கிறிஸ் கெயில் பஞ்சாப் அணியை வழிநடத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல ராகுலுக்கு மாற்று வீரராக மந்தீப் சிங் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அல்லது மாயங்க் அகர்வால் அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Views: - 138

0

0

Leave a Reply