ஐசிசி டி-20 தரவரிசை: இரண்டாவது இடத்தில் நீடிக்கும் ராகுல்: கோலிக்கு எந்த இடம் தெரியுமா?

3 March 2021, 4:25 pm
Quick Share

ஐசிசி டி-20 தரவரிசை பட்டியலில் இந்திய வீரரான கேஎல் ராகுல் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். கோலி ஒரு இடம் நகர்ந்து 6வது இடம் பிடித்தார்.


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் நியூசிலாந்து அணி பங்கேற்று வருகிறது. இதன் முதல் இரண்டு போட்டியில் நியூசிலாந்து அணியின் இடது கை பேட்ஸ்மேனான கான்வே மற்றும் துவக்க வீரரான மார்டின் கப்டில் ஆகியோர் சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டனர். 
இந்நிலையில் சர்வதேச அளவில் டி20 அரங்கில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இவர்கள் இருவரும் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர். கான்வே 99 ரன்கள் அடித்து கிறிஸ்ட்சர்ச் போட்டியில் அசத்தினார். இதன் மூலம் 46 இடங்கள் முன்னேற்றமடைந்து 17வது இடம் பிடித்துள்ளார். இவர் இந்த முன்னேற்றத்தை வெறும் 8 போட்டியிலேயே எட்டியுள்ளார். இதேபோல் அந்த அணியின் துவக்க வீரர் மார்டின் கப்டில் மூன்று இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார்.


இதேபோல நியூசிலாந்து அணி வீரர்களான கிளன் பிலிப்ஸ், ஜிம்மி நீசம் ஆகியோர் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளனர். பவுலர்களுக்கான பட்டியலில்  டிம் சவுத்தி, மிட்சல் சாண்ட்னர், இஷ் சோதி, மற்றும் டிரெண்ட் பவுல்ட் ஆகியோர் முன்னேற்றம் கண்டனர்.  
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில், மார்கஸ் ஸ்டோனிஸ், 78 ரன்கள் அடித்து மிரட்ட, 77 இடங்கள் முன்னேறி பட்டியலில் 110 வது இடம் பிடித்தார். மாத்யூ வெட், ஜய் ரிச்சர்ட்சன் ஆகியோரும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.  

Views: - 7

0

0