தல தோனியின் சாதனையைத் தகர்க்கக் காத்திருக்கும் கிங் கோலி!

22 February 2021, 7:46 pm
virat kohli - updatenews360
Quick Share

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் சாதனையை விராட் கோலி தகர்க்கக் காத்திருக்கிறார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 24ம் தேதி அகமதாபாத்தில் துவங்குகிறது. பகலிரவு ஆட்டமாக நடக்கும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெறும் பட்சத்தில், இந்திய கேப்டன் விராட் கோலி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையைத் தகர்க்க உள்ளார்.

சென்னையில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் முன்னாள் கேப்டனான தோனியின் சாதனையை இந்திய கேப்டன் விராட் கோலி சமன் செய்தார். இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் தோனியின் சாதனையைச் சமன் செய்தார் கோலி. இந்நிலையில் இந்திய அணி ஆமதாபாத்தில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் கோலி தலைமையில் இந்திய அணி பெறும் 22 வது டெஸ்ட் வெற்றியாக இது அமையும். இதன் மூலம் தோனியை பின்னுக்குத் தள்ளி இந்த பட்டியலில் முதலிடம் பிடித்தார் கோலி.

இந்த பட்டியலில் மற்ற இந்திய அணியின் கேப்டன்களான முகமது அசாருதீன் (13 வெற்றிகள்), சவுரவ் கங்குலி (10 வெற்றிகள்), சுனில் கவாஸ்கர் (7 வெற்றிகள்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இதற்கிடையில் தற்போதுவரை இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் கோலி 3703 ரன்கள் அடித்துள்ளார். இந்த டெஸ்டில் கோலி இன்னும் 23 ரன்கள் அடிக்கும்பட்சத்தில் இந்திய மண்ணில் அதிக ரன்கள டடித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் இந்திய வீரர் திலீப் வெங்சர்கரை கோலி முந்துவார். மேலும் இந்த டெஸ்டில் புஜாரா மற்றும் கோலி ஆகியோர் இந்த போட்டியில் 45 மற்றும்12 ரன்கள் அடிக்கும்பட்சத்தில் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார்கள். முன்னதாக சுனில் கவாஸ்கர் (1331 ரன்கள்), குண்டப்பா விஸ்வநாத் (1022 ரன்கள்) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

Views: - 1

0

0

Leave a Reply