மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 54 ரன்கள் சேர்த்தார். இதில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். ஜாஸ் பட்லர் 22 ரன்களும், ரியான் பராக் 19 ரன்களும் சேர்த்தனர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஹெட்மயர், 13 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 27 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார்.
கொல்கத்தா தரப்பில் டிம் சவுத்தி 2 விக்கெட் கைப்பற்றினார். உமேஷ் யாதவ், அனுகுல் ராய், ஷிவம் மவி தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணியில் ஆரோன் பிஞ்ச் 4 ரன்னுடன் வெளியேற பாபா இந்திரஜித் 15 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 34 ரன்கள் எடுத்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த நிதிஷ்ராணா, ரிங்குசிங்கும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். நிதிஷ்ராணா 48 ரன்களும், ரிங்குசிங் 42 ரன்களும் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தனர். 19.1 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்ததுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.