சென்னை அணிக்கு இன்று மோசமான நாள் : தொடக்கம் சிறப்பாக இருந்தும் தோல்வியே மிச்சம்..!

Author: Udayaraman
7 October 2020, 11:46 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி சென்னை அணியை தோற்கடித்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு முன்னணி வீரர்கள் தங்களின் விக்கெட்டுக்களை இழந்தனர்.இருப்பினும், அந்த அணியின் திரிபாதி மட்டும் தனிமனிதனாக போராடினார். அவர் மட்டும் 81 ரன்கள் குவிக்க, 20 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதைத்தொடர்ந்து, களமிறங்கிய சென்னை அணிக்கு வாட்சன் (50), ராயுடு (30) ரன்கள் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருப்பினும் பின்கள வரிசையில் களமிறங்கிய வீரர்கள் சொதப்பியதால் சென்னை அணிக்கு கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணியால் 16 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 157 ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

Views: - 52

0

0