அத்லெடிக் பில்பாவ்வை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பார்சிலோனா: கடினமாக இருந்ததாக மெஸ்சி கருத்து!

18 April 2021, 12:44 pm
Quick Share

கோபா டெல் ரே ஃபைனலில் அத்லெடிக் பில்பாவ்வை வீழ்த்தி பார்சிலோனா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டி மிகவும் கடினமாக இருந்ததாக மெஸ்சி கருத்து தெரிவித்துள்ளார்.

கோபா டெல் ரே ஃபைனல் போட்டியில் அத்லெடிக் பில்பாவ் அணியை, பார்சிலோனா அணி எதிர்கொண்டது. இந்த போட்டியின் 60 வது நிமிடம் வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இது பார்சிலோனா அணியை மிகவும் எரிச்சலடைய செய்தது எனலாம். ஆனால் தொடர்ந்து நடந்த போட்டியில் எழுச்சி பெற்ற பார்சிலோனா 12 நிமிட இடைவெளியில் அடுத்ததடுத்து 4 கோல்களை அடித்தது.

போட்டியின் 60வது நிமிடத்தில் பார்சிலோனா அணிக்காக அண்டோனி கிரிஸ்மான் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து 63வது நிமிடத்தில் பிரான்கி டி ஜாங் இரண்டாவது கோல் அடித்தார். தொடர்ந்து 68வது மற்றும் 72வது நிமிடங்களில் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்சி அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்து மிரட்டினார். இதற்கு அத்லெடிக் அணியால் கடைசி வரை பதிலடி கொடுக்க முடியவில்லை. இறுதியில் பார்சிலோனா அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் மெஸ்சி, “இது மிகவும் கடினமானதாக இருந்தது. ஆனால் இந்த மகிழ்ச்சிக்கு நாங்கள் தகுதியானவர்கள் தான். சாம்பியன்ஸ்!!” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் போட்டிக்கு பின் பேசிய மெஸ்சி கூறுகையில், “எனது வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்ட இந்த அணியின் கேப்டனாக இருப்பது மிகவும் ஸ்பெஷலானது. கோப்பையை வென்றதில் மகிழ்ச்சி” என்றார்.

Views: - 124

0

0