செம-யான கேட்ச்.. ஆனா, 4 பல்லு போச்சே.. ரத்தம் சொட்ட சொட்ட மைதானத்தில் இருந்து வெளியேறிய வீரர்.. (வீடியோ)

Author: Babu Lakshmanan
8 December 2022, 3:54 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போலவே, இலங்கையில் லங்கா பிரிமீயர் லீக் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேனி ஃபால்கன்ஸ் அணியும், கல்லே கிளாடியேட்டர்ஸ் அணியும் மோதின.

கர்லோஸ் பிராத்வொயிட் வீசிய பந்தை நுவனிடு ஃபெர்னான்டோ அடித்த பந்து கவர் திசையில் கேட்ச்சாக மேலே சென்றது. இதனைப் பிடிக்க சமிகா கருணாரத்னே உள்பட 3 வீரர்கள் சென்றனர். ரிவர் சைடில் சென்ற கருணாரத்னே பந்தை கேட்ச் பிடிக்க முற்பட்டார். அப்போது, பந்து கருணாரத்னேவின் வாய் பகுதியில் பட்டு, 4 பற்கள் உடைந்து கீழே விழுந்தன.

பற்கள் உடைந்தாலும் கேட்ச்சை கெட்டியாக பிடித்த அவர், வாயில் ரத்தத்துடன் மைதானத்தில் நடந்து வந்தார். பின்னர், உடனடியாக கல்லேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து கேன்டி ஃபல்கான்ஸ் அணியின் இயக்குநர் பேசுகையில்,” காயமடைந்த 26 வயது வீரர் சமீகா கருணாரத்னே உடல்நிலையில் சீராக இருக்கின்றார். இனி வரும் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார்,” எனக் கூறினார்.

இதனிடையே, கருணாரத்னே அடிபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 536

1

2