லக்னோ அணிக்கு டஃப் கொடுத்த டெல்லி.. 6 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 2வது இடத்துக்கு முன்னேறியது லக்னோ!!

Author: Udayachandran RadhaKrishnan
1 May 2022, 8:08 pm
LSG Won - Updatenews360
Quick Share

10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற 45-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் , டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், குயின்டன் டி காக் களமிறங்கினர் .

இருவரும் தொடக்கம் முதல் அதிரடியாக ரன்களை சேர்த்தனர் .அணியின் ஸ்கோர் 41 ரன்னாக இருந்தபோது டி காக் 23 ரன்களில் ஆட்டமிழந்தார் .

பின்னர் வந்த தீபக் ஹூடா ராகுலுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார் .
ஒரு புறம் கே. எல்.ராகுல் மறுபுறம் ஹூடா என இருவரும் டெல்லி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் .

சிறப்பாக விளையாடிய ஹூடா 32 பந்துகளில் ,கே.எல் .ராகுல் 35 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர்

தொடர்ந்து விளையாடிய ஹூடா 52 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். பந்துகளை பவுண்டரி சிக்சருக்கு விரட்டி அதிரடியாக விளையாடிய ராகுல் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் .தொடர்ந்து கடைசி சில ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது .

தொடர்ந்து 196 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் 3 ரன்களிலும் , பிரித்விஷா 5 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர் .

பின்னர் வந்த மிட்செல் மார்ஷ் , கேப்டன் ரிஷாப் பண்ட் ,2 விக்கெட்டுகள் இழந்தாலும் அதிரடியை விடவில்லை. இருவரும்’பந்துகளை சிக்ஸர் ,பவுண்டரிக்கு பறக்க விட்டனர் .

லக்னோ வீரர் குருனால் பாண்டியா வீசிய ஒரு ஓவரில் 18 ரன்கள் அடித்தார் ரிஷாப் பண்ட். அணியின் ஸ்கோர் 73 ரன்னாக இருந்தபோது மார்ஷ் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த லலித் யாதவ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார் .சிறப்பாக விளையாடிய பண்ட் 44 ரன்களில் விக்கெட்டை இழந்தார் .ரோவ்மேன் பவெல் சிறிது நேரம் அதிரடியாக விளையாடினர் .அவர் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் அக்சர் படேல் போராடி 42 ரன்கள் எடுத்தார்

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது .இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது .

Views: - 1284

0

0