ரொம்ப வயசானதாக உணர்கிறேன்… சாதனை குறித்து சொன்ன ‘தல’ தோனி!

17 April 2021, 8:48 am
Quick Share

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200வது போட்டியில் களமிறங்கிய கேப்டன் தோனி, தனக்கு வயசானதாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் மும்பையின் வான்கடே மைதானத்தில் நடந்த 8வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த இரு அணிகளும் தங்களின் முதல் போட்டியில் வெவ்வேறுவிதமான முடிவுகளை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஷாருக் கான் (47) மட்டும் ஆறுதல் அளிக்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 106 ரன்கள் அடித்தது. இதையடுத்து எட்டகூடிய இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 107 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வேகப்பந்துவீச்சாளார் வெறும் 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் பஞ்சாப் அணி இந்த மைதானத்தில் எட்டவேண்டிய சராசரி ஸ்கோரைக் கூட எட்டவில்லை. இதனால் இந்த இலக்கை சிஎஸ்கே அணி வெறும் 15.4 ஓவரிலேயே இதை எட்டியது. முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியின் தோல்விக்கு பின் எழுச்சி பெற்று கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறைந்த ஓவரில் வெற்றி பெற்றதால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. ராயல் சாலஞ்சர்ஸ் அணி 4 புள்ளிகளுடம் முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பங்கேற்ற 200 வது போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் பங்கேற்றது குறித்து பேசிய தோனி, தனக்கு வயதானதாக உணர்வதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தோனி கூறுகையில்,“எனக்கு மிகவும் வயதானதாக உணர்கிறேன். கடந்த 2011 தான் கடைசியாக சென்னை ஆடுகளம் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் இருந்தது. அதன் பிறகு எவ்வளவு கடினமாக பணியாளர்கள் பாடுபட்ட போதும் சென்னை ஆடுகளம் குறித்து எங்களுக்கு திருப்தி ல்லை. சென்னை உடனான பயணம் இந்தியா முழுவதும் மட்டுமல்ல, பல நாடுகளிலும் சென்று பயணிக்க வைத்துவிட்டது” என்றார்.

Views: - 78

0

0