மே மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலை வெளியிட்டது ஐசிசி..!!

8 June 2021, 6:15 pm
iCC award- updatenews360
Quick Share

கிரிக்கெட் வீரர்களின் சாதனைகள் மற்றும் சிறந்த ஆட்டங்களை கவுரவிக்கும் விதமாக, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரரை தேர்வு செய்து மாதாந்தோறும் விருதை ஐசிசி வழங்கி வருகிறது.

இந்த விருதை அறிவித்த முதல் 3 மாதத்திற்கான விருதை, ரிஷப் பந்த (ஜனவரி), அஸ்வின் (பிப்ரவரி), புவனேஸ்வர் குமார் (மார்ச்) ஆகியோர் பெற்றனர்.

இந்த நிலையில், மே மாதத்திற்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் ஆண்கள் பிரிவில் பாகிஸ்தானின் ஹசன் அலி, இலங்கையின் பிரவீன் ஜெயவிக்ரமா, வங்கதேசத்தில் முஷ்ஃபிகுர் ரஹீம் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, பெண்கள் பிரிவில் கேத்ரின் பிரைஸ், கேபி லூயிஸ், லியா பால் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Views: - 355

0

0