சின்ன ‘தல’ ரெய்னா, சிக்சர் மன்னன் கிறிஸ் கெயிலை தொடர்ந்து இந்த சாதனையை படைத்த மாயங்க்!

2 May 2021, 9:58 pm
Quick Share

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் 99 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மாயங்க் அகர்வால் புது மைல்கல்லை எட்டினார்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டெல்லி அணியை எதிர்கொள்கிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ராகுல் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மாயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இதில் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் நிகோலஸ் பூரானிக்கு பதிலாக இங்கிலாந்தின் தாவித் மலான் அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார். அதேபோல மாயங்க் அகர்வாலும் அணிக்கு திரும்பினார். டெல்லி அணியில் எந்த மாற்றமும் இல்லை.

மல்லுக்கட்டிய மாயங்க்
இதையடுத்து களமிறங்கிய கிறிஸ் கெயில் (13), தாவித் மலான் (26), தீபக் கூடா (1) என யாரும் கைகொடுக்காத நிலையில் ராகுல் இல்லாத நிலையில் கேப்டன் பொறுப்பை ஏற்ற,
மாயங்க் அகர்வால் 58 பந்தில் 8 பவுண்டரி 4 சிக்சர் என மொத்தமாக 99 ரன்கள் அடித்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார். மேலும் ஐபிஎல் அரங்கில் தனது 9வது அரைசதத்தை பதிவு செய்தார் மாயங்க். இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் அடித்தது.

மூன்றாவது வீரர்
இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் 99 ரன்கள் அடித்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்த மூன்றாவது வீரரானார் மாயங்க் அகர்வால். முன்னதாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக கடந்த 2013 இல் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா 52 பந்தில் 99 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக கடந்த 2019 இல் நடந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் 64 பந்தில் 99 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இவர்களைத் தொடர்ந்து தற்போது இன்றைய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக மாயங்க் அகர்வால் 99 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த மூன்றாவது வீரரானார்.

இரண்டாவது அதிகம்
அதேபோல கேப்டனாக அறிமுகமான போட்டியில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் சஞ்சு சாம்சனை (119, எதிர்- பஞ்சாப் கிங்ஸ், 2021) தொடர் ந்து மாயங்க் அகர்வால் இரண்டாவது இடம் பிடித்தார். இவர்களைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் (93, எதிர்- கொல்கத்தா, 2018) மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Views: - 122

0

0

Leave a Reply