கணவர் ஸ்டுவர்ட் பின்னியைக் கேலி செய்தவர்களுக்கு ‘நோஸ்-கட்’ கொடுத்த மாயந்தி லாங்கர்!

1 March 2021, 8:13 pm
Binny with wife - updatenews360
Quick Share

தனது கணவரான ஸ்டுவர்ட் பின்னியை கேலி செய்தவர்களுக்கு நோஸ்கட் கொடுக்கும் விதமாக விளையாட்டு செய்தியாளர் மாயந்தி லாங்கர் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளின் முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவர் மாயந்தி லாங்கர் பின்னி. இவர் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவி ஆவார். இந்நிலையில் இன்று தனது கணவர் பின்னி எட்டிய புதிய சாதனைக்காக மாயந்தி தனது டிவிட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்டூவர்ட் பின்னி இன்று தனது 100 ஆவது லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் களமிறங்கினார்.

இவர் தற்போது நடக்கும் விஜய் ஹசாரே டிராபி தொடரில் நாகாலாந்து அணிக்காக இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இவரது இந்த சாதனையை பாராட்டும் விதமாக இவரது மனைவியான மாயந்தி லாங்கர் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் இவருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். இவருக்குப் பாராட்டு தெரிவித்த அதே நேரம் இவரைக் கேலி செய்த ரசிகர்களுக்கு மூக்கை உடைக்கும் படியான பதிவாகவும் அந்த பாராட்டு பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து மாயந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இது வெறுப்பவர்களுக்காகவும், குறிப்பாக ஆதரிப்பவர்களுக்கான பதிவு. இந்த 100 சுமார் 17 ஆண்டுகளால் ஆன உழைப்பு. கடின உழைப்பு உங்கள் வாழ்க்கையில் அதைச் செயல்படுத்தும் வரை அது வெறும் வார்த்தை மட்டும்தான். சிலர் ஸ்டூவர்ட் பின்னி வெறும் வார்த்தைகளால் மட்டுமே வாழ்க்கை நடத்தி வருகிறார் என்றனர். மேலும் ஒரு சாதனைக்காக எனது பாராட்டுக்கள்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ரசிகர்கள் ஸ்டுவர்ட் பின்னியைக் கேலி செய்து வந்தனர்.

இந்திய அணிக்காக ஸ்டுவர்ட் பின்னி 6 டெஸ்ட் போட்டிகள்,14 ஒரு நாள் போட்டிகள் மட்டும் 3 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். மேலும் ஸ்டூவர்ட் பின்னி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 95 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி உள்ளார். இவரது 17 ஆண்டுக்கால வாழ்க்கையை பெரும்பாலும் கர்நாடகா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது இவர் நாகாலாந்து அணிக்காக விளையாடி வருகிறார்.

Views: - 11

0

0