ஏ.டி.பி. டென்னிஸ் தொடர்: ரஷ்ய வீரர் சாம்பியன் பட்டம்…!

23 November 2020, 5:09 pm
Medvedev - updatenews360
Quick Share

லண்டன்: ஏ.டி.பி., டென்னிஸ் தொடரில் ரஷ்யாவின் மெட்வெடேவ் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

லண்டனில், உலகின் ‘டாப்-8 ‘ வீரர்கள் பங்கேற்ற ஏ.டி.பி., டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்-3 ‘ ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், 4வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் டேனில் மெட்வெடேவ் மோதினர். முதல் செட்டை தியம் 6-4 எனக் கைப்பற்றினார். 2வது செட்டை டேனில் மெட்வெடேவ் 7-6 என தன்வசப்படுத்தி பதிலடி தந்தார்.

இரண்டு மணி நேரம், 43 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் மெட்வெடேவ் 4-6, 7-6, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக ஏ.டி.பி., கோப்பை கைப்பற்றினார்.11 ஆண்டுகளுக்கு பின், இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ரஷ்ய வீரரானார் டேனில் மெட்வெடேவ். கடந்த 2009ல் ரஷ்யாவின் நிகோலே டேவிடென்கோ கோப்பை வென்றிருந்தார்.

தவிர மெட்வெடேவ், 100 சதவீத வெற்றியுடன் கோப்பையை வென்றார். நான்காவது வீரர் இம்முறை லீக் சுற்றில் உலகின் ‘நம்பர்-1’ செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்திய மெட்வெடேவ், அரையிறுதியில் ‘நம்பர்-2’ ஸ்பெயினின் நடாலை தோற்கடித்தார்.

பின், பைனலில் ‘நம்பர்-3’ ஆஸ்திரியாவின் தியமை வென்றார். இதன்மூலம் ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவில் உலகின் ‘டாப்-3’ வீரர்களை வீழ்த்தி கோப்பை வென்ற 4வது வீரரானார் மெட்வெடேவ். ஏற்கனவே ஜெர்மனியின் போரிஸ் பெக்கர், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் டேவிட் நல்பாந்தியன் ஆகியோர் இத்தகைய வெற்றி பெற்றிருந்தனர்.

Views: - 0

0

0