டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: வில்வித்தை குழு போட்டி…வெற்றியை தவற விட்ட இந்திய அணி..!!

Author: Aarthi
26 July 2021, 1:15 pm
Quick Share

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 தொடரில் வில்வித்தை பிரிவில் இந்திய ஆண்கள் குழு காலிறுதி போட்டியில் 6-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.

2020 ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி நேற்று துப்பாக்கி சுடுதல் பிரிவில் தோல்வியை தழுவியது. பேட்மிட்டன் சிந்து, பாக்சிங் மேரி கோம், பாய்மர படகு போட்டி நேத்ரா குமணன், டேபிள் டென்னிஸ் மானிக பத்ரா ஆகியோர் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறி நம்பிக்கை கொடுத்தனர்.

எப்படி

இந்நிலையில் இன்று வில்வித்தை பிரிவில் இந்திய ஆண்கள் குழு கலந்து கொண்டது. அட்டானு தாஸ், பிரவின் ஜாதவ், தருண்தீப் ராய் 16 அணிகள் சுற்றில் கலந்து கொண்டது. இதில் வெற்றிபெறும் அணி எட்டு அணிகள் கொண்ட காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இந்த போட்டி அதிக முக்கியத்துவம் பெற்றது. கஜகஸ்தான் அணியை இந்திய வில்வித்தை ஆண்கள் படை எதிர்கொண்டது. இதில் முதல் செட்டில் இந்திய ஆண்கள் படை 55 புள்ளிகள் பெற்றது. கஜகஸ்தான் அணி வெறும் 54 புள்ளிகள் பெற்றது. இதனால் முதல் சுற்றிலேயே இந்தியா 2-0 என்று முன்னிலை பெற்றது.

அதன்பின் இரண்டாவது சுற்றிலும் இந்தியா 52-50 என்ற மதிப்பெண்களை பெற்றதால், மொத்தமாக 4-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. இதில் மீண்டு வந்த கஜகஸ்தான் அணி மூன்றாவது சுற்றில் 57 புள்ளிகள் பெற்றது. இந்தியா 56 புள்ளிகள் மட்டுமே பெற்றது.

தோல்வி

இதன்பின் நான்காவது சுற்று வரை நீண்ட ஆட்டத்தில் இந்தியா கடைசி சுற்றல் 55-54 எடுத்தது. இதனால் 6-2 என்ற புள்ளி கணக்கில் இந்தியா காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனையடுத்து காலிறுதியில் இந்தியா – தென் கொரியா அணியுடன் மோதியது.

தென்கொரியாவுடனான ஆட்டத்தில் கிம் ஜி டியோக், கி வுஜின், ஒ ஜின்ஏக் ஆகியோரை இந்திய அணி எதிர்கொண்டது. 59, 59., 56 மதிப்பெண்களை பெற்று மொத்தமாக மூன்று சுற்று முடிவில் 6 புள்ளிகளை தென் கொரியா அணி பெற்றது. தென் கொரியாவின் மூன்று வீரர்களும் சிறப்பாக இதில் அம்பு எய்தி இருந்தார்கள்.

டோக்கியோ ஒலிம்பிக்:வில்வித்தை காலிறுதியில் தோல்வியை தழுவிய இந்தியா..!

ஆனால் இந்திய வீரர்கள் அட்டானு தாஸ், பிரவின் ஜாதவ், தருண்தீப் ராய் மொத்தமாக 54, 57, 54 மதிப்பெண்களை மட்டும் பெற்றனர். இதனால் இந்திய அணி மொத்தமாக மூன்று சுற்று முடிவில் ஒரு புள்ளி கூட பெறவில்லை. இதன் காரணமாக இந்திய அணி தென் கொரியாவிடம் 6-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

Views: - 287

0

0