பார்சிலோனாவை விட்டு வெளியேறும் முடிவில் தயக்கம் காட்டும் மெஸ்சி!

4 February 2021, 10:43 pm
Quick Share

பார்சிலோனா அணியை விட்டு வேறு அணிக்கு மெஸ்சி மாறுவது குறித்து இந்தாண்டு இறுதியில் தான் தெரியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பார்சிலோனா அணியுடனான மெஸ்சியின் ஒப்பந்தம், இந்தாண்டு சீசனுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்சி வேறு அணிக்கு மாறுவார் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பே ஒரு மாற்றம் தேவை என மெஸ்சி பார்சிலோனா அணியைவிட்டு வெளியேற முற்பட்டார். ஆனால் அந்த முயற்சியை அணி நிர்வாகம் தடுத்துவிட்டது. இதனால் சட்ட ரீதியான நடவடிக்கையை தவிர்க்க மெஸ்சி பார்சிலோனா அணியுடனே தொடரும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் பார்சிலோனா அணிக்காக கடந்த 5 சீசன்களில் பங்கேற்க மெஸ்சி மொத்தமாக 55.5237 கோடி யூரோக்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் இந்த தொகை கிட்டத்தட்ட ரூ. 4920 கோடிகளாகும். பார்சிலோனா அணியுடனான மெஸ்சியின் ஒப்பந்தம் இன்னும் ஐந்து மாதங்கள் உள்ளது. இதுவரை மெஸ்சி 51.1540 கோடி யூரோக்களை பெற்றுள்ளார் என ஸ்பெயின் நாட்டு பத்திரிக்கை ஒன்று செய்தியில் குறிப்பிட்டது. இதற்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பார்சிலோனா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறிய பின் மெஸ்சி மீண்டும் பெப் கார்டிலோவுடன் இணையவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தற்போது மான்செஸ்டர் சிட்டி அணியில் உள்ளார். அதேபோல நெய்மர் இடம் பெற்றுள்ள பாரீஸ் செயிட் அணியில் மெஸ்சி இணையவுள்ளார் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மெஸ்சி தரப்பில் தற்போது வரை வேறு அணிக்கு மாறுவது குறித்து எவ்வித உறுதியான தகவலும் வெளியாகவில்லை. மேலும் வரும் 2021-2022 சீசனில் எந்த அணிக்காக விளையாட வேண்டும் என்பதை மெஸ்சி ஒருவர் தான் தீர்மானிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் தன்னை வளர்த்த பார்சிலோனா அணியைவிட்டு மெஸ்சி வெளியேற தயக்கம் காட்டி வருவதால் தான் இப்படி மௌனம் காக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Views: - 0

0

0