என் மூஞ்சியில் முட்டையை வீசிய இந்திய வீரர்கள்: முன்னாள் இங்கிலாந்து கேப்டன்!

20 January 2021, 5:45 pm
Pant test - updatenews360
Quick Share

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய அணி வீரர்கள் தனது முகத்தில் முட்டையை வீசி விட்டதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதை இந்திய அணி 2 – 1 எனக் கைப்பற்றி புது வரலாறு படைத்த தொடரை வென்றது. இந்திய அணியின் பல வீரர்கள் காயத்தால் வெளியேறிய நிலையிலும் தோல்வியில் இருந்து மீண்டு வந்து தொடரைக் கைப்பற்றிச் சாதித்துள்ளது பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய தொடருக்கு முன்பாக நான்கு போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 4-0 எனக் கைப்பற்றும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான் கணித்திருந்தார்.

அவரின் கணிப்பு சரியானது என்பதை நிரூபிக்கும் விதமாக முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்து. தொடர்ந்து இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும் விடுப்பு வழங்கப்பட்டது. மேலும் இந்தமுறை ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர். அடிலெய்டில் நடந்த டெஸ்டில் இந்திய அணி படுமோசமாக 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதன் பிறகு தொடர்ந்து வீரர்கள் இந்திய அணியில் காயம் அடைந்து தொடர்களில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது.

ஆனால் இதுபோன்ற இக்கட்டான நிலையிலிருந்து மீண்டு வந்த இளம் இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா அணியின் 32 ஆண்டுக் கால தகர்க்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த பிரிஸ்பேன் மைதானத்திலேயே அந்த அணியை வீழ்த்தி மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்நிலையில் இந்திய அணியின் வெற்றியைத் தனது முகத்தில் முட்டையை அடித்தது போல உணர்ந்ததாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில், “ஆஸ்திரேலிய அணி தொடரை 4 – 0 என வெல்லும் எனக் கணித்து இருந்தேன். ஆனால் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்திய அணி தனது படுதோல்வியில் இருந்து மீண்டும் எழுச்சி பெற்று வந்து இந்த தொடரைக் கைப்பற்றி எனது முகத்தில் முட்டையை அடித்து விட்டது. ஆனால் இது பற்றி எனக்கு உண்மையில் கவலை இல்லை. கத்துக்குட்டி வீரர்களான வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ் ஆகியோர் எனது கணிப்பைப் பொய்யாக்கி விட்டனர். கிரிக்கெட் இவ்வளவு சிறப்பானதாக அமையும் என்றால் உண்மையில் மகிழ்ச்சி தான்.

இந்த முடிவு ஆஸ்திரேலிய அணியில் சில முக்கியமான முக்கியமான கேள்விகளையும், ஆஷஸ் தொடரை கைப்பற்ற இங்கிலாந்து அணிக்கு புதிய நம்பிக்கையும் அளித்துள்ளது. மேலும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியில் உள்ள பலவிதமான சிக்கல்களையும் வெளிப்படுத்தியுள்ளது. ஒரு சில தொடர்களில் கேப்டன்களே மிக முக்கிய பங்கு வகிப்பவர்கள். ஆனால் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சொந்த ஊருக்குத் திரும்பிய நிலையில், ரகானே அவரிடமிருந்து அணியை எடுத்துக்கொண்டு அதைச் சிறப்பாக வழிநடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார். இது கிரிக்கெட்டின் உச்சக்கட்ட சிறப்பம்சம் ஆகும்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 5

0

0