ஆமை வேக பந்துவீச்சு… ‘தல’தோனிக்கு அபராதம்!

Author: Udayaraman
11 April 2021, 1:54 pm
Quick Share

மும்பை: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய இரண்டாவது லீக் போட்டியில் ஆமைவேகபந்துவீச்சு காரணமாக சென்னை கேப்டன் தோனிக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இந்தியாவில் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று துவங்கி நடக்கிறது . மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று நடந்த இரண்டாவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் ஆமை வேகத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர்கள் பந்துவீசிய காரணமாக அந்த அணியின் கேப்டன் தோனிக்கு ரூ. 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி எதிரான லீக் போட்டியில் ஆமை வேகத்தில் பந்துவீசியதற்காக அபராதம் விதிக்கப்படுகிறது” என்று அதில் குறிப்பிட்டுள்ளது. இது அந்த அணியின் இந்த தொடரின் முதல் குற்றம் என்பதால், தோனிக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என அதில் குறிப்பிட்டுள்ளது.

இந்த போட்டியில் 188 ரன்கள் என்ற இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பிரித்வீ ஷா (72), ஷிகர் தவன் (85) ஜோடி அரைசதம் கடந்து அசத்த, டெல்லிகேபிடல்ஸ் அணி 18.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 190 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் தொடர்ச்சியாக சென்னை அணிக்கு எதிராக தனது மூன்றாவது வெற்றியை டெல்லி கேபிடல்ஸ் அணி பதிவு செய்து அசத்தியது.

Views: - 184

0

0