ஹெலிகாப்படர் கிளம்பியாச்சு… பேட்ட பராக்… மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர்கள் பறக்கவிட்ட ‘தல’ தோனி!

5 April 2021, 8:29 pm
Quick Share

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான பயிற்சியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி மைதானத்தில் நான்கு புறமும் சிக்சர் அடித்து அசத்திய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் கிரிக்கெட் தொடர் போட்டி வரும் 9ம் தேதி முதல் துவங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பங்கேற்கும் வீரர்கள் முன்னதாக ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தங்களது முதல் சில போட்டிகளை மும்பையில் பங்கேற்கிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்த பயிற்சியின் போது தோனி ஹெலிகாப்டர் ஷாட் எனப்படும் முறையில் மைதானத்தின் நான்கு புறங்களிலும் சிக்சர் அடித்து அசத்தியுள்ளார். இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது.

இந்த வீடியோவை தற்போது தோனியின் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர். இந்த வீடியோவில் தோனி விளையாடியதற்கு ஏற்ப பேட்டை படத்தின் பாடல் ஒன்றையும் பின்னணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதேபோல கடந்த தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திரசிங் தோனிக்கும் மோசமான தொடராகவே அமைந்தது. இதுவரை 204 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ள தோனி 4,632 ரன்கள் அடித்துள்ளார்.

கடந்த ஆண்டு 14 போட்டிகளில் விளையாடிய தோனி வெறும் 200 ரன்கள் மட்டுமே அடித்தார். இந்த மோசமான செயல்பாடு காரணமாக கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முதல்முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் போட்டிகளுடன் வெளியேறியது. மேலும் 14 போட்டிகளில் மொத்தமாக விளையாடி வெறும் 12 புள்ளிகள் மட்டுமே கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றது. இதற்கிடையில் இந்த ஆண்டு ராபின் உத்தப்பா, மொயின் அலி மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் கௌதம் உள்ளிட்ட வீரர்கள் சென்னை அணி ஏலத்தில் எடுத்ததன் மூலம் இந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இவர்களை தவிர கடந்த ஆண்டு பங்கேற்காமல் இருந்த சுரேஷ் ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளதால் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வழக்கமான பார்முக்கு திரும்பும் என்று ரசிகர்கள் அதிக ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். வரும் 10ம் தேதி டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பங்கேற்கிறது.

Views: - 3

0

0