இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக திகழ்ந்துவரும் எம்எஸ் தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.,இவர்களுக்கு ஜிவா தோனி என்ற ஒரு அழகிய மகள் இருக்கிறார்.
தோனி தன்னுடைய விளையாட்டு நேரத்தை தவிர்த்து மற்ற நேரம் எல்லாமே தன்னுடைய குடும்பம் மனைவி மகளுடன் நேரத்தை கழித்து வருகிறார். தற்போது தோனியின் மகள் ஜிவாவிற்கு 9 வயதாகிறது. ஜிவா தோனி தற்போது சொந்த ஊரான ராஞ்சியில் இருக்கும் பெரும் புகழ்பெற்ற Taurian World பள்ளியில் தான் படித்து வருகிறார்.
2008 ஆம் ஆண்டு அமித் பஜ்லா என்பவரால் இந்த பள்ளி நிறுவப்பட்டு அப்பகுதியில் பெரும் புகழ்பெற்ற ஸ்கூலில் ஒன்றாக மாறியிருக்கிறது. கிட்டத்தட்ட 65 ஏக்கர் பரப்பளவில் பரந்த விரிந்த வளாகத்தில் அமைந்திருக்கும் இந்த பள்ளி தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதோடு பிள்ளைகளின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க பெரிய பெரிய கோடீஸ்வரர்களே முன் வரிசையில் போட்டி போட்டுக் கொண்டு காத்திருக்கிறார்கள். இந்த பள்ளியில் சேர்க்க இலட்சக்கணக்கில் குழந்தைகளுக்கு செலவு செய்ய வேண்டி இருக்கிறது. ஆம் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தோராயமாக ரூபாய் 4.40 லட்சம் செலவாகும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: “உன் சைடுல Fault வச்சினு என்ன பார்த்து…” ஜெயம் ரவி வெளியிட்ட வீடியோவுக்கு தெறிக்கும் லைக்ஸ்!
அதே போல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான கட்டணம் ஆண்டுக்கு ரூ. 4.80 லட்சத்திற்கும் மேல் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கட்டணத்தில் பள்ளி சீருடை, பாட புத்தகங்கள் பிற தேவையான பொருட்கள் எல்லாமே அடங்கும் என கூறப்படுகிறது. இந்த பள்ளியில் தான் தோனியின் மகள் ஜிவா படித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் பள்ளியில் சாதாரண மக்களின் பிள்ளைகள் காலடி எடுத்து வைப்பது என்பது கனவாகவே இருந்து வருகிறது என கூறுகிறார்கள் அப்பகுதியை சேர்ந்தவர்கள்.
0
0