டெல்லியை ஊதித் தள்ளிய மும்பை : இஷான் கிஷானின் அதிரடியால் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!

31 October 2020, 8:00 pm
ishan kishan - updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

துபாயில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய டெல்லி அணி, மும்பை பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், விக்கெட்டுக்களை இழந்து திணறியது. ஸ்ரேயாஷ் ஐயர் 25 ரன்களும், பண்ட் 21 ரன்களும் குவித்தனர். மற்ற வீரர்கள் சொல்லும் அளவிற்கு விளையாடததால், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் சேர்த்தது. பும்ரா, போல்ட் தலா 3 விக்கெட்டுக்களும், குல்டர் நைல், ராகுல் சஹார் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டி காக் 26 ரன்னில் ஆட்டமிழந்த நிலையிலும், இஷான் கிஷான் அதிரடியாக ரன்களை சேர்த்தார். இதன்மூலம், மும்பை அணி 15வது ஓவரிலேயே இலக்கை அடைந்து அபார வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த இஷான் கிஷான் 72 ரன்கள் குவித்தார்.

இந்த மோசமான தோல்வியினால் டெல்லி அணியின் ரன்ரேட் மைனஸிற்கு சென்றுள்ளது. இதனால், அந்த அணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. டெல்லி கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 14

0

0

1 thought on “டெல்லியை ஊதித் தள்ளிய மும்பை : இஷான் கிஷானின் அதிரடியால் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!

Comments are closed.