கிறிஸ் லின் ஆறுதல்: பெங்களூரு அணிக்கு 160 ரன்கள் இலக்கு !

9 April 2021, 9:28 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது.

இந்திய ரசிகர்கள் கொண்டாடும் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று சென்னையில் துவங்கியது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் அணி, நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 14வது ஆண்டுக்கான கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது. இதில் சென்னையில் நடக்கும் முதல் லீக் போட்டியில், ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் மும்பை இந்தியன்ஸ் அணி, ஒருமுறை கூட கோப்பை வெல்லாத விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா (19) சுமாரான துவக்கம் அளித்தார். பின் இணைந்த சூர்யகுமார் யாதவ், கிறிஸ் லின் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சீரான இடைவெளியில் பவுண்டரிகள் விளாசிய இந்த ஜோடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தியது.

இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் 31 ரன்னில் ஜேமிசன் வேகத்தில் அவுட்டானார். தொடர்ந்து வந்த இஷான் கிஷான் 28 ரன்கள் அடித்து வெளியேறினார். ஒருபுறம் விக்கெட் சரிய மறு புறம் சீரான இடைவெளியில் பவுண்டரிகள் விளாசிய கிறிஸ் லின் 49 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கினார். பின் வரிசை வீரர்கள் யாரும் கைகொடுக்காத நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 159 ரன்கல் எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணிக்கு 160 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

Views: - 45

0

0