சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிய பாண்டியா..!! மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அதிர்ச்சி

13 November 2020, 4:31 pm
Krunal-Pandya- updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிந்து இந்தியா திரும்பிய க்ருணல் பாண்டியாவிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்தது. கடந்த 12ம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் டெல்லியை தோற்கடித்து மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, ஐபிஎல் தொடரில் கலந்து கொண்ட வீரர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேற்று மும்பைக்கு விமானத்தில் வந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்களிடம் வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், க்ருணல் பாண்டியாவிடம் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். காரணம், அவர் விலையுயர்ந்த கைக்கடிகாரங்களை கொண்டு வந்ததுதான். பின்னர், இந்த வழக்கு விமான நிலைய சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Views: - 17

0

0