ரோகித்தின் ‘கேப்டன் நாக்’ : கொல்கத்தாவை எளிதில் வீழ்த்தியது மும்பை அணி..!

23 September 2020, 11:58 pm
Quick Share

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவை மும்பை அணி எளிதில் வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணிக்கு மற்ற வீரர்கள் ரன்களை குவிக்க தவறினாலும், கேப்டன் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 80 ரன்கள் குவிக்க, அவருக்கு பக்க பலமாக சூர்ய குமார் யாதவ் 47 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். இதனால், மும்பை அணி 20 ஓவர்களில் 195 ரன்கள் குவித்தது.

196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி மும்பையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இத்னால் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக கம்மின்ஸ் 33 ரன்களும், தினேஷ் கார்த்திக் 30 ரன்களும் எடுத்தனர். 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Views: - 8

0

0