‘பாயிண்ட் டேபிள் டாப்பர்’ நாங்க தான் : டெல்லியை எளிதில் பின்னுக்கு தள்ளியது மும்பை..!

Author: Udayaraman
11 October 2020, 11:14 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அபுதாபியில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய டெல்லி பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், தவான், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்து, அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ஸ்ரேயாஸ் 42 ரன்களில் ஆட்டமிழந்தாலும், தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 69 ரன்களை குவித்தார். இதனால், 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது.

இதைத்தொடர்ந்து, 163 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு டிகாக் (53), சூர்யகுமார் யாதவ் (53) ஆகியோர் அரைசதம் விளாசி, அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். வெற்றிக்கு இறுதி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இரு பந்துகள் மீதம் வைத்து மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகளுடன் மும்பை அணி மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

Views: - 46

0

0