பும்ரா, போல்ட் வேகத்தில் சுருண்டது டெல்லி : 6வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை..!

5 November 2020, 11:18 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை அணி 6வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

துபாயில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய மும்பை அணிக்கு, கேப்டன் ரோகித் சர்மா முதல் பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இருப்பினும், டிகாக் (40), சூர்யகுமார் யாதவ் (51), இஷான் கிஷான் (55), ஹர்திக் பாண்டியா (37) ஆகியொர் அதிரடி காட்ட, மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் சேர்த்தது.

இமாலய இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு பிரித்வி ஷா, ரகானே, தவான் ரன் எதுவுமின்றி விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர். அவர்களை தொடர்ந்து, ஸ்ரேயாஸ் ஐயர் (12), பண்ட் (3) ஆகியோரும் ஏமாற்றியதால், டெல்லி அணி 50 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது. ஸ்டொயினிஸ் (65), அக்சர் படேல் (42) மட்டும் ஓரளவுக்கு ரன் குவித்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணியால் 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. பும்ரா 4 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை அணி, 6 வது முறையாக முன்னேறியுள்ளது. தோல்வியடைந்த டெல்லி அணி நாளை நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் குவாலிபயர் 2-ல் மோதும்.

Views: - 54

0

0