மீண்டும் மீண்டும் ‘சாம்பியன் சைடு’ என்பதை நிரூபித்த மும்பை : ராஜஸ்தானை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேற்றம்..!

6 October 2020, 11:39 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி, மும்பை மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய மும்பை அணி வழக்கம் போல, நிதானத்துடன் கூடிய அதிரடியை காட்டியது. சூர்யகுமார் யாதவ் (79), ரோகித் சர்மா (35), ஹர்திக் பாண்டியா (30) ரன்கள் குவித்தனர். இதனால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் சேர்த்தது.

இமாலய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. முன்னணி வீரர்கள் தங்களின் விக்கெட்டுக்களை ஒருபுறம் இழந்தாலும், பட்லர் மட்டும் மறுமுனையில் வெற்றிக்காக போராடினார். அவர் 70 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். இதனால், மும்பை அணியின் வெற்றி உறுதியானது. இறுதியில், ஆர்ச்சர் 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க ராஜஸ்தான் அணி 136 ரன்களுக்கு சுருண்டது. மும்பை அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் 4வது வெற்றியை பதிவு செய்த மும்பை அணி 8 புள்ளிகளுடன் மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

Views: - 53

0

0