சுழல் ஜாம்பவான் முரளிதரன் சென்னை மருத்துவமனையில் அனுமதி!

18 April 2021, 10:41 pm
Quick Share

இலங்கையின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவனான முத்தையா முரளிதரன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 800 விக்கெட்கள் வீழ்த்திய முரளிதரன் தற்போதுவரை அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை தக்கவைத்துள்ளார். இதற்கிடையில் நேற்று தனது 48வது பிறந்தநாளை முரளிதரன் கொண்டாடினார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இன்று முரளிதரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முத்தையா முரளிதரன் இலங்கையின் கண்டியைச் சேர்ந்தவர். இவர் திருச்சியை பூர்வீகமாக கொண்டவர். தவிர இவரின் மனைவி மதிமலர் சென்னையை சேர்ந்தவர். தற்போது நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆலோசனைக்குழுவில் முரளிதரன் இடம் பிடித்துள்ளார். இதற்காக சென்னையில் இருந்தார் முரளிதரன். இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 114

0

0