ஆஸி., தொடர் : இந்திய அணியில் நடராஜன் சேர்ப்பு : ஒரு டெஸ்டில் மட்டும் விளையாடும் கோலி..!! இந்திய அணி மாற்றங்களின் முழுவிபரம்..!!

9 November 2020, 5:30 pm
Kohli - nattu - updatenews360
Quick Share

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபில் தொடர் முடிந்த கையோடு, நவ.,12ம் தேதி இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்கிறது. அங்கு தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இந்தத் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில வீரர்கள் காயம் காரணமாகவும், தனிப்பட்ட விஷயங்களுக்காகவும் விலகுவதால், மாற்றங்கள் செய்யப்பட்ட இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

BCCI Updatenews360

அதன்படி, முதல்முறையாக இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக, ஐபிஎல்லில் சிறப்பாக பந்து வீசிய மற்றொரு தமிழக வீரர் நடராஜன் தேர்வாகியுள்ளார். மேலும், சஞ்சு சாம்சன் கூடுதல் விக்கெட் கீப்பராக அணியில் இடம்பிடித்துள்ளார்.

அதேபோல, தனிப்பட்ட காரணங்களுக்காக கேப்டன் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாட இருக்கிறார். ஒருநாள், டி20 போட்டிகளுடன் 3 டெஸ்ட் போட்டிகளையும் விளையாட மாட்டார். உடற்தகுதியின் காரணமாக துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரூவில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வரும் இஷாந்த் சர்மா, முழு உடற் தகுதி பெற்ற பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பார். அதேபோல, டி20, ஒருநாள் தொடர்களுக்கான அணியில் இடம்பெறாத ரோகித் சர்மா, டெஸ்ட் அணிக்கு தேர்வாகியுள்ளார்.

india team - updatenews360

ஐபிஎல் தொடரில் காயமடைந்த சஹாவின் உடல்நிலை பொறுத்து, இந்தத் தொடரில் அவருக்கு இடம் உள்ளதா..? இல்லையா..? என்பது குறித்து தெரிய வரும்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே வரும் 27ம் தேதி ஒருநாள் தொடரும், டிச.,17ம் தேதி டெஸ்ட் தொடரும் தொடங்குகிறது.

அனுபவ வீரர்கள் இல்லாத இளம் வீரர்களைக் கொண்ட ஒருநாள், டி20 தொடருக்கான இந்திய அணியை, கேஎல் ராகுல் வழிநடத்துவார் என்று தெரிகிறது.

Views: - 25

0

0