உங்கள் அன்புக்கும்… ஆதரவுக்கும் ரொம்ப நன்றி : நடராஜன் உருக்கம்..!!!

2 February 2021, 5:31 pm
Natarajan - updatenews360
Quick Share

ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய போது தனக்கு உற்சாக வரவேற்பு அளித்த மக்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் பயணத்தில் இதுவரையில் யாருக்கும் கிடைத்திடாத அதிர்ஷ்டம் தமிழக வீரர் நடராஜனுக்கு கிடைத்தது. ஒரே தொடரில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அவர் அறிமுகமான 3 ஃபார்மேட்களிலும் அசத்தலான பந்து வீச்சை வெளிப்படுத்தி, ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், இந்திய அணிக்கே புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளார்.

ஆனால், இதுவரை இந்திய அணி சாதிக்காததை, அவர் அறிமுகமான தொடரில் சாதித்தப் பெருமையுடன் சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டிக்கு வந்த அவருக்கு, ஊர் மக்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். சாரட் குதிரை வண்டியில் அமர வைக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அப்போது, இந்திய தேசிய கொடியை அவர் ஏந்தியவாறு, மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

இந்த நிலையில், “ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகு சொந்த ஊரில் கிடைத்த பிரமாண்ட வரவேற்பு பேரின்பத்தையும், மகிழ்ச்சியையும் தருகிறது. உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 53

0

0