உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்ரிக்கா அணியை தோற்கடித்து நெதர்லாந்து அணி அதிர்ச்சி கொடுத்துள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தது.
இந்த நிலையில், நேற்று நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி, தென்னாப்ரிக்காவை வீழ்த்தி, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இரு போட்டிகளில் அபார வெற்றி பெற்ற தென்னாப்ரிக்காவை, நெதர்லாந்து எப்படி சமாளிக்கப் போகுமோ..? என்ற கேள்வி அனைவரிடத்தில் எழுந்திருந்தது. அப்படியிருக்கையில் நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை குறுக்கிட்டதால் 43 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 245 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் எட்வர்ட்ஸ் 78 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து, விளையாடிய தென்னாப்ரிக்கா அணி, நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியால் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இதனால், அந்த அணி 207 ரன்னுக்கு ஆட்டமிழந்து 38 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியின் போது, நெதர்லாந்து பீல்டிங் செய்கையில், தண்ணீர் கொண்டு வரும் வீரர் ஒரு பேப்பரையும் கொண்டு வந்து, கேப்டனிடம் கொடுத்துக் கொண்டே இருந்தார். அது டக்வொர்த் லுயிஸ் விதி ரன்களாக இருக்கலாம் என்று ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால், அதுதான் இல்லை. அந்த பேப்பரில் இருந்த ரகசியம் என்ன என்பது குறித்து நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது :- நாங்கள் நியாயமாக சில ஆய்வுகளை செய்கிறோம். அதேபோல, சில மேட்ச்அப்களை கொண்டு வருகிறோம். ஆனால், அது எல்லா மேட்ச்களிலும் வேலை செய்வது கிடையாது. அந்த பேப்பரில் இருந்தது அப்படியான திட்டங்கள்தான்.
கடந்த இரண்டு போட்டிகளில் எங்களுடைய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கடைசி ஓவர் வரை இருந்து விளையாட முடியவில்லை. இன்று அந்த பொறுப்பை நான் எடுத்துக் கொள்ள நினைத்து விளையாடினேன். இன்று இரவு பார்ப்பதற்கு எங்களுக்கு எல்லாமே நல்லதாக அமைந்திருக்கிறது, எனக் கூறினார்.
தென்னாப்ரிக்கா அணி ஹாட்ரிக் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தப் போட்டியில் தோல்வியை தழுவி இருப்பது, புள்ளிப்பட்டியலில் பின்தங்கி இருக்கும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு பெரிய நிம்மதியாக இருக்கும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.