டேல் ஸ்டெயினை கண்ணீர் வராத குறையாகக் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

4 March 2021, 5:52 pm
Quick Share

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினை நெட்டிசன்கள் படுமோசமாகக் கலாய்த்து வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். சமீபத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் பங்கேற்பதை விடப் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் மற்றும் இலங்கையில் விளையாடப்படும் இலங்கை பிரீமியர் லீக் தொடரில் அங்கீகாரம் கிடைப்பதாகச் சர்ச்சைக் கருத்தை வெளியிட்டார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வரும் பணம் மட்டுமே பெரிதாகப் பார்க்கப்படுவதாகக் கூறியிருந்தார்.

இதையடுத்து இவரது கருத்துக்கு பல்வேறு பக்கங்களிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார் ஸ்டெயின். இது தொடர்பாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ எனது கிரிக்கெட் பயணத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிகவும் முக்கிய பங்கு வகித்துள்ளது. மற்றவர்களுக்கும் இது சிறந்த தலமாக இருந்துள்ளது. எனது வார்த்தைகளில் ஐபிஎல் தொடரை அவமதிக்கும் விதமாகவோ அல்லது வேறு நாடுகளின் நடத்தப்படும் தொடர்களுடன் ஒப்பிடும் வகையிலோ அல்லது அதன் மதிப்பைக் குறைக்கும் வகையிலோ குறிப்பிட்டவை அல்ல. சமூக வலைத்தளத்தில் இது போன்ற வார்த்தை மாற்றப்படுவது சகஜம் தான். இந்த கருத்து யார் மனதையும் புண்படுத்தும் வகையில் அமைந்திருந்தால் அதற்கு எனது மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற 6 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து இந்த தொடர் உடனடியாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலைப்பார்த்த ரசிகர்கள் டேல் ஸ்டெயினை சமூக வலைத்தளத்தில் படுமோசமாகக் கலாய்த்து வருகின்றனர்.

Views: - 1

0

0