இந்தியா, இங்கிலாந்துக்கு 50 – 50 சான்ஸ்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு நியூசிலாந்து தகுதி!

2 February 2021, 7:53 pm
NZ - updatenews360
Quick Share

இங்கிலாந்தில் நடக்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பைனல் போட்டிக்கு நியூசிலாந்து அணி முதல் அணியாகத் தகுதி பெற்றுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகம் செய்தது. இந்நிலையில் இதற்கான பைனல் போட்டி வரும் ஜூன் மாதம் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. பல்வேறு அணிகள் இந்த பைனல் போட்டிக்குத் தகுதி பெறப் பல டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான பைனல் போட்டிக்கு நியூசிலாந்து அணி முதல் அணியாகத் தகுதி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு தள்ளி வைத்ததையடுத்து நியூசிலாந்து அணி இந்த பைனல் போட்டிக்குத் தகுதி பெற்றது. நியூசிலாந்து அணி தற்போது பங்கேற்ற டெஸ்ட் போட்டிகளில் சுமார் 70% புள்ளிகளைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்த பைனல் போட்டிக்கு இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் மூலம் இன்னொரு அணி தகுதி பெறும்.

தற்போதைய நிலையில் இந்திய அணி 71.7 சதவீதம் புள்ளிகளைப் பெற்று டெஸ்ட் போட்டிகளில் அதிக சதவீத புள்ளிகளைப் பெற்ற அணியாக உள்ளது. நியூசிலாந்து அணி 70 சதவீத புள்ளிகளுடன் இருந்த போதும், அந்த அணி பெரும் புள்ளிகளில் மாற்றம் எதுவும் இருக்காது என்பதால் இந்த அணி நேரடியாக பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி 69.2 புள்ளிகளுடன் உள்ளது. இங்கிலாந்து அணி 65.2 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 5ஆம் தேதி துவங்க உள்ளதால், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது. ஒருவேளை இந்த தொடர் டிரா ஆகும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு வாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தகுதி பெறும் வாய்ப்புகள்
இந்திய அணி தகுதி பெற இந்த தொடரைக் கைப்பற்றும் வேண்டிய நிலை
2-0
2-1
3-0
3-1
4-0

இங்கிலாந்து அணி தகுதி பெற இந்த தொடரைக் கைப்பற்றும் வேண்டிய நிலை
3-0
3-1
4-0

ஆஸ்திரேலிய அணி தகுதி பெற இந்த தொடரைக் கைப்பற்றும் வேண்டிய நிலை
இந்திய அணி 1-0
இங்கிலாந்து அணி 1-0
இங்கிலாந்து அணி 2-0
இங்கிலாந்து அணி 2-1
தொடர் (0-0) சமன்
தொடர் (1-1) சமன்
தொடர் (2-2) சமன்

Views: - 0

0

0

1 thought on “இந்தியா, இங்கிலாந்துக்கு 50 – 50 சான்ஸ்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு நியூசிலாந்து தகுதி!

Comments are closed.