இந்திய டி20 அணியின் கேப்டனான கேஎல் ராகுல் : கோலியோடு சேர்த்து ரோகித் சர்மாவுக்கும் பிசிசிஐ குறியா..?

Author: Babu Lakshmanan
2 November 2021, 3:47 pm
kl rahul - kohli - updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி என 3 வடிவ ஆட்டங்களுக்கும், விராட் கோலி, கடந்த 5 முதல் 6 வருடங்களாக கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அணியில் ஏற்பட்ட அழுத்தம் மற்றும் தோல்வியின் காரணமாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு, டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அண்மையில் அறிவித்தார்.

கோலி தலைமையிலான இந்திய அணி பல்வேறு அணிகளுக்கு எதிரான தொடர்களை கைப்பற்றி அசத்தியிருந்தாலும் கூட, ஐசிசி கோப்பைகளை இதுவரைக்கும் பெற்றுக் கொடுத்ததில்லை. எனவே, கோலியின் முடிவை பெரும்பாலான ரசிகர்கள் நேர்மறையாக பார்த்தனர். மேலும், கேப்டனாக கடைசி டி20 உலகக்கோப்பையில் அவர் விளையாடுவதால், இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால், இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி, அரையிறுதிக்கான வாய்ப்பையும் ஏறக்குறைய இழந்து விட்டது என்றே சொல்லலாம். இதனால், கேப்டன் விராட் கோலி மீது விமர்சனங்களும், எதிர்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

இதனிடையே, உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு கோலிக்கு பதிலாக யார் கேப்டனாக நியமிக்கப்படுவார்…? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்து வந்தது. ரோகித் சர்மாதான் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற பேச்சும் அடிபட்டு வந்தது.

kohli - rohit - updatenews360

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டித் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுலை பிசிசிஐ நியமனம் செய்துள்ளது. நியூசிலாந்து தொடருக்கு மட்டுமே கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டிருந்தாலும் கூட, இதில் பல்வேறு நகர்வுகள் இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அதாவது, ரோகித் சர்மாவுக்கு நடப்பு உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், இனி சீனியர்களை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என்றும், எனவே, ஐபிஎல்லில் கேப்டன்களில் ஜொலித்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதுதான் சரியானதாக இருக்கும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் நம்புவதாக கூறுகின்றனர்.

Views: - 921

0

0