இங்கிலாந்தை வீழ்த்தி சரித்திரம் படைத்த நியூசிலாந்து.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்ல ரொம்ம டஃப் கொடுப்பாங்களோ…!!

13 June 2021, 9:16 pm
nz win - updatenews360
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி புதிய சாதனையை படைத்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி, இங்கிலாந்துடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி சமனில் முடிந்தது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்கிங்காமில் கடந்த 10ட்ம தேதி தொடங்கியது. இதில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 303 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 388 ரன்கள் சேர்த்தது. 85 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 122 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம், 41 இலக்கை எளிதில் அடித்து வெற்றி பெற்றது.

இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நியூசிலாந்து, 22 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது.

Views: - 356

0

0