எங்க வீரர் ஒருத்தருக்கு கொரோனா வந்தால்… உலகில் வேறு எங்கும் பாதுகாப்பு இல்லை என அர்த்தம்!

7 April 2021, 3:02 pm
Quick Share

மும்பை இந்தியன்ஸ் அணியின் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ள கிரன் மோரேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் மற்ற அணி வீரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு அணிக்கு மிகப்பெரிய சவால்களைக் கூடுதலாகக் கொடுத்து உள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு அணியிலும் இடம்பெற்றுள்ள வீரர்கள், குழுவினர் என கொரோனா வைரசின் தாக்கம் மாறி மாறி தொடர்ந்து வண்ணமாகவே உள்ளது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த கிரண் மோரேவிற்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க அணிகளின் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி தான் பாதுகாப்பு வளையம் என்ற முறையை கடைப்பிடிக்கத் துவங்கியது. இதற்கிடையில் பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ள வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் அணிகள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது பயிற்சி முகாம் அமையும் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் கடந்த மார்ச் மாதம் முதலே மும்பை இந்தியன்ஸ் அணியின் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகி ஒருவர் பேசுகையில், “மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி முகாமில் பாதுகாப்பு இல்லை என்றால் இந்த உலகத்தில் வேறு எங்கும் பாதுகாப்பே கிடையாது. அவர்கள் இந்த பாதுகாப்பான சூழலை உருவாக்கக் கடுமையாகப் போராடியுள்ளனர்.

கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி தான் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியது. இது கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப் பின்பற்றப்பட்ட முறைப்படியே தற்போதும் பின்பற்றப்படுகிறது. இதற்காகச் சென்னையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் ஒட்டுமொத்த விங்கையுமே முழுவதுமாகப் புக் செய்துள்ளது மும்பை அணி. இவ்வளவு பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்த பின்பும் கிரண் மோரேவுக்கு எப்படி வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் மும்பை இந்தியன்ஸ் அணியினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த முறை இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முழுமையாக நடத்தப்படுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

Views: - 1

0

0